SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோயில் யானை மிதித்து பாகன் பலியான சம்பவம் பரிகார பூஜைகளுக்கு பின் சமயபுரத்தில் நடை திறப்பு

2018-05-27@ 01:10:30

மண்ணச்சநல்லூர் : சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பரிகார மற்றும் பலி பூஜைகளுக்கு பின் நேற்று காலை 10 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மசினி என்ற 9 வயது பெண் யானை , பாகன் கஜேந்திரனை(44) நேற்றுமுன்தினம்  மிதித்து கொன்றது. இதனால், கோயில் நடை அடைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மசினியை சாந்தப்படுத்தி சமயபுரம் அருகேயுள்ள மாகாளிகுடி என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கு கொண்டு சென்று கட்டி வைத்தனர். இரவு 12 மணிக்கு, பரிகார பூஜை நடந்தது. மீண்டும் நேற்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 2 பரிகார பூஜைகள் நடந்தன. இதையடுத்து மீண்டும் காலை 6 மணிமுதல் 9.30 மணிவரை கோயிலை சுற்றிலும் 8 திசைகளிலும் பலி பூஜை நடந்தது. இந்த பூஜை முடிந்த பின் 10 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

இதற்கிடையே யானை மசினி திடீரென கோபமடைந்தது ஏன் என்பதை அறிய கால்நடை மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டது. கோவை மண்டல வன காப்பக மருத்துவர் மனோகரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு நேற்று காலை 11 மணியளவில் கோயிலுக்கு வந்தனர். பின்னர், மாகாளிகுடி கொட்டகை சென்றனர். அங்கு யானையை பரிசோதனை செய்தனர். இதுகுறித்து, மருத்துவர் மனோகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், `மசினிக்கு மதம் பிடிக்கவில்லை. நன்றாக உள்ளது. பெண் யானைகள் 10 முதல் 14 வயதிற்குள் பருவம் அடைந்துவிடும். தற்போது மசினிக்கு 9 வயதாகிறது. பருவ நிலை நெருங்குவதால் சுரப்பிகள் சுரக்கும்போது புத்துணர்வும் வேகமும் வரும். நேற்று (நேற்றுமுன்தினம்) மசினி பருவ நிலையை அடையும் போது புத்துணர்வு, வேகம் வந்துள்ளது. அப்போது பாகன் மசினியின் பின்னங்கால் அருகே  இருந்ததால் பலியாகி உள்ளார்’ என்றார்.'


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்