SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தொழிலாளர்களின் கணக்கில் பிஎப் வட்டியை சேர்க்க உத்தரவு

2018-05-26@ 03:46:51

புதுடெல்லி, மே 26:  கடந்த நிதியாண்டுக்கான பிஎப் வட்டி 8.55 சதவீதத்தை தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் சேர்க்க கள அதிகாரிகளுக்கு பிஎப் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.   தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் உள்ள பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டுக்கான வட்டியை நிர்ணயம் செய்ய  பிஎப் அறக்கட்டளை வாரிய கூட்டம், கடந்த பிப்ரவரி மாதம்  நடந்தது. இதில் 2017-18 நிதியாண்டுக்கான பிஎப் வட்டி 8.55 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு முன்பு 2016-17 நிதியாண்டில் பிஎப் வட்டியாக 8.65 சதவீதம் வழங்கப்பட்டது.  2015-16ல் 8.8 சதவீதமும், 2013-14 மற்றும் 2014-15 நிதியாண்டுகளில் 8.75 சதவீதமும் வட்டி வழங்கப்பட்டது.

கடந்த நிதியாண்டுக்கான வட்டியின்படி  586கோடி வழங்க வேண்டி வரும் என பிஎப் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.  இந்நிலையில், நிதியமைச்சகம் 8.55 சதவீத வட்டியை தொழிலாளர்களுக்கு வழங்க  கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் வட்டியை கணக்கிட்டு சேர்க்குமாறு பிஎப் கள அதிகாரிகளுக்கு பிஎப் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருவதாக பிஎப் அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போதைய பிஎப் வட்டி கடந்த 5  ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

  • keralanunprotest

    பிஷப் பிராங்கோவை கைது செய்யாததை கண்டித்து கேரளாவில் கன்னியாஸ்திரிகள் போராட்டம்

  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்