SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2018-05-26@ 00:25:22

* பாங்காக்கில் நடைபெற்று வரும் உபேர் கோப்பை மகளிர் பேட்மின்டன் தொடரின் அரை இறுதியில் தாய்லாந்து அணி 3-2 என்ற கணக்கில் பலம் வாய்ந்த சீன அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
* பீல்டிங்கின்போது கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி இங்கிலாந்து கவுன்டி கிளப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது இங்கிலாந்தில் உள்ள இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், ‘கோஹ்லி ஒன்றும் இயந்திரம் அல்ல. அவரும் மனிதர்தான். ராக்கெட் எரிபொருளைப் பயன்படுத்தினால் கூட காயம் முழுவதுமாகக் குணமடையாமல் அவரால் களமிறங்க முடியாது’ என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
* பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் களமிறங்க, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் - வீனஸ் வில்லியம்ஸ் ஜோடிக்கு ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸி. அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், கனடாவில் நடைபெறும் குளோபல் டி20 லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜூன் 28ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. நட்சத்திர வீரர்கள் கிறிஸ் கேல், ஆந்த்ரே ரஸ்ஸல், ஷாகித் அப்ரிடி, பிராவோ, மலிங்கா, கிறிஸ் லின், டேரன் சம்மி, டேவிட் மில்லர், சுனில் நரைன் ஆகியோரும் களமிறங்க உள்ளனர்.
* நெதர்லாந்தில் நடைபெற உள்ள ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டித் தொடருக்கான இந்திய அணி பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய வளாகத்தில் மே 28ம் தேதி தொடங்கி மூன்று வாரத்துக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 48 வீரர்கள் அடங்கிய பட்டியலை ஹாக்கி இந்தியா நேற்று அறிவித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

 • 23-06-2018

  23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்