SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தெப்ப திருவிழா நடக்குமா? குளத்தில் தண்ணீர் நிரப்பாமல் அதிகாரிகள் அலட்சியம்

2018-05-25@ 21:05:51

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 10ம் நாளான 28ம் தேதி இரவு தெப்பதிருவிழா நடக்கிறது. பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான தெப்பகுளம் வடக்கு ரதவீதியில் உள்ளது.
ஆண்டுதோறும் வைகாசி மாத விசாக திருவிழாவுக்காக இந்த தெப்பகுளத்துக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து நாஞ்சில்நாடுபுத்தனாறு கால்வாய், கிளை கால்வாயான பாவனாசம் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவுக்காக இதுவரை தண்ணீர் கொண்டு வரப்படவில்லை. தற்போதுவரை குளம் வறண்டு காணப்படுகிறது. பேச்சிப்பாறை அணை சீரமைப்பு பணிக்காக அணை தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் அனைத்தும் கால்வாய்கள் வழியாக கடலுக்கு சென்று வீணாகியது.

ஆனால் பகவதியம்மன் கோயில் தெப்பதிருவிழாவுக்காக தண்ணீர் நிரப்பப்படவில்லை. விழாவுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் ெதப்ப திருவிழா நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும், பொதுப் பணித்துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இந்த ஆண்டு தெப்ப திருவிழா நடைபெற தெப்பகுளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

  • ranirashmiindianship

    இந்திய கடலோர காவல்படையின் விரைவு ரோந்து கப்பல் 'ராணி ராஷ்மணி' விசாகபட்டினத்தில் அர்பணிப்பு

  • kashmirkheerbhavanifstvl

    காஷ்மீரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கீர் பவானி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

  • MexicanChildrenAmerica

    2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்காவை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம்

  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்