SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை!

2018-05-25@ 12:19:37

பெற்றோர் யாருக்காவது குறை தைராய்டு இருந்தால், வாரிசுகளுக்கும் அது வர வாய்ப்பு உண்டு. குழந்தைக்கும் குறை தைராய்டு பிறந்த குழந்தைக்கும் குறை தைராய்டு (Cretinism) ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறந்தவுடன் குழந்தை வீறிட்டு அழவில்லை என்றால், மூன்று நாட்களில் தாய்ப்பால் அருந்தவில்லை என்றால், குட்டையாக இருந்தால், மூக்கு சப்பையாக இருந்து, நாக்கு வெளித்தள்ளி, வயிறு பெருத்து, தொப்புளில் குடலிறக்கம் காணப்பட்டால், அந்தக் குழந்தைக்குக் குறை தைராய்டு இருக்க அதிக வாய்ப்புள்ளது.

பொதுவாக, குழந்தைக்கு வயது ஏற ஏற அதன் நடவடிக்கைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். ஆனால், குறை தைராய்டு உள்ள குழந்தைக்கு `வளர்ச்சி மைல்கல்’ தாமதப்படும். உதாரணமாக, தாயின் முகம் பார்த்துச் சிரிப்பது, குரல் கேட்டு திரும்புவது, நடக்கத் தொடங்குவது, பல் முளைப்பது, பேச்சு வருவது, ஓடியாடி விளையாடுவது போன்ற வளர்ச்சி நிலைகளில் பாதிப்பு ஏற்படும். வயதுக்கு ஏற்ற அதன் செயல்பாடுகளில் மந்தநிலை உண்டாகும். மாறுகண், காது கேளாமை போன்ற குறைபாடுகளும் தோன்றும்.

பள்ளி வயதில் அதன் அறிவு வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மையிலும் (I.Q.) பின்தங்கும். முக்கியமாக, கற்றலில் குறைபாடுகள், நினைவாற்றலில் குறைபாடுகள் தோன்றும். பெண் குழந்தைகள் பருவமடைவதில் தாமதம் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் நிலையில் குழந்தையை உடனடியாக டாக்டரிடம் காண்பிப்பது அவசியம். அலட்சியமாக இருந்தால், குழந்தை எப்போதுமே மந்த புத்தியுடன்தான் இருக்கும். காலத்தோடு கவனித்து, தகுந்த சிகிச்சை பெற்றால், குழந்தைக்கு நோய் குணமாகும்.

காரணம் என்ன?

கருவில் குழந்தை நன்கு வளர்வதற்குத் தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன் சரியான அளவில் சென்றாக வேண்டும். அப்படிக் கிடைக்காதபோது, குழந்தைக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது. இதனால், குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைகிறது. கர்ப்ப காலத்தில் தாய்க்கு அயோடின் சத்து கிடைக்காமல், தாயின் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது சில அறிகுறிகள் தென்படும். அதாவது முடி உதிர்வது, உடல் பருப்பது, தோலில் வறட்சி ஏற்படுவது, நெடுநாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். இந்நிலையில் தாய் தகுந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டால், குழந்தைக்குப் பிறவியிலேயே குறை தைராய்டு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

- ஜி.ஸ்ரீவித்யா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்