SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தைராய்டிலிருந்து யோகா தரும் தீர்வு!

2018-05-25@ 12:15:01

ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னையாக தைராய்டு குறைபாடு இருக்கிறது. தைராய்டு சுரப்பு குறைந்தால் உடல் பருமன், கால் வீக்கம், மாதவிடாய் கோளாறு கள், அதிகச் சோர்வு, தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகச்
சுரந்தால் உடல் மெலிதல், கை நடுக்கம், அதிகமான இதயத்துடிப்பு, அதிக வியர்வை போன்றவை தோன்றும். இதற்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது அவசியம் என்பதைப் போலவே, சில யோகாசனங்களைச் செய்வதன் மூலமும் தைராய்டு சுரப்பியின் வேலையை சமன் செய்ய முடியும். குறிப்பாக புஜங்காசனம், உஸ்த்ராசனம், விபரீதகரணி, மத்யாசனம், ஹாலாசனம், சேதுபந்த சர்வாங்காசனம், தனுராசனம் போன்றவை மிகுந்த பயன் தருபவை.

முறைப்படி யோகா கற்றுக் கொண்டவர்கள் இந்த ஆசனங்களை செய்துவந்தால் தைராய்டு பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும். முன்பே பாதிக்கப்பட்டவர்களாக இருப்பின், மேற்சொன்ன ஆசனங்களைச் செய்துவந்தால் பாதிப்பின் தீவிரத்திலிருந்து வெளியேறவும் முடியும்.
பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை, நோய் பாதித்திருக்கும் அளவு, உணவுமுறை போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த ஆசனங்கள் தைராய்டிலிருந்து முழுமையாக விடுவிக்கவும் செய்யும். யோகாசனம் செய்து பழக்கமில்லாதவர்கள் தகுதிவாய்ந்த நிபுணரிடம் பயிற்சி பெற்றபிறகு முயற்சிக்கலாம்!

- இந்துமதி


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-01-2019

    12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்