SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மே 25 சர்வதேச தைராய்டு தினம்

2018-05-25@ 11:59:30

சர்வதேச தைராய்டு கூட்டமைப்பு மே 25-ம் நாளை சர்வதேச தைராய்டு தினமாக அனுசரிக்க வேண்டுமென்று 2007-ம் ஆண்டு அறிவித்தது. அதன் பின்பு தைராய்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மே 25 அன்று சர்வதேச தைராய்டு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான வாழ்க்கையை தைராய்டு பிரச்னைகள் பாதிக்கும் விதம், அப்பிரச்னைகளை சரிசெய்வதற்கான மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் இந்நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது போன்றவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

முன்கழுத்துக்கழலை


கழுத்துப் பகுதியில், மூச்சுக் குழாயின் முன்புறம் ஒரு சிறு வண்ணத்துப் பூச்சியின் வடிவில் தைராய்டு சுரப்பி (Thyroid gland) அமைந்துள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தைச் (உணவை ஆற்றலாக மாற்றும் முறை) சீர்படுத்தும் தைராக்சின், டிரை அயோடோதைரோனைன் என்கிற இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. தைராய்டு சுரப்பியில் ஏற்படும் அசாதாரணமான வீக்கத்தை முன்கழுத்துக்கழலை (Goiter) என்று சொல்கிறோம்.

இந்த வீக்கத்தால் கழுத்தும் குரல்வளையும் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கத்தால் மூச்சு விடுதல், உணவு உண்பது போன்றவற்றில் தடை ஏற்படுவதோடு பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.

தைராய்டு நோய் அறிகுறிகள்

தைராய்டு சுரப்பியின் வீக்கமே இந்நோயின் முக்கிய அறிகுறியாக உள்ளது. இதனால் தொண்டையில் முடிச்சு  உருவாகிறது. எடை குறைவு, பசி கூடுதல், வெப்பம் பொறுக்க இயலாமை போன்றவை தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் (Hyperthyroidism) ஏற்படும் அறிகுறிகளாக உள்ளது. எடை கூடுதல், மலச்சிக்கல், குளிர் தாங்க முடியாமை, களைப்பு, உலர்ந்த செதில் போன்ற தோல் போன்றவை தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதால் (Hypothyroidism) ஏற்படும் அறிகுறிகளாக உள்ளது.  

தைராய்டின் வகைகள்…


முன்கழுத்துக்கழலையின் தன்மையைப் பொறுத்து இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. முழு தைராய்டு சுரப்பியும் வீங்கி தொடுவதற்கு மென்மையாக இருப்பதை Diffuse small goitre என்றும், தைராய்டு சுரப்பியின் சில பகுதிகள் வீங்கித் தொடுவதற்கு முடிச்சுகள் போல இருப்பதை Nodular goitre என்றும் அழைக்கிறோம்.

நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

தைராய்டு ஹார்மோன் அதிகமாக அல்லது குறைவாக சுரப்பதன் காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. முக்கியமாக அயோடின் சத்துக் குறைபாடே இந்த நோய் பரவலாக காணப்படுவதற்குக் காரணமாக உள்ளது. இதனால் இந்நோய் அயோடின் குறைபாட்டுக் கோளாறு என்றும் அழைக்கப்படுகிறது. உலக அளவில் 150 கோடி மக்கள் அயோடின் குறைபாட்டு கோளாறுகளால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களில் 20 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர் என்கிறது புள்ளிவிவரங்கள்.
    
- க.கதிரவன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்