SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விஜயபுரா அருகே 8 விவி பேட் இயந்திரங்கள் வீச்சு : 3 பேர் கைது

2018-05-24@ 01:01:13

பெங்களூரு : விஜயபுரா அருகே வி.வி பேட் இயந்திரங்கள் வீசப்பட்ட விவகாரத்தில் தனியார் நிறுவன மேலாளர் உள்பட 3 பேரை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். விஜயபுரா மாவட்டம் பசவனபாகேவாடி சரகத்திற்குட்பட்ட மனகூலி என்ற கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செட்டில் 8 வி.வி பேட் இயந்திரங்கள் கேட்பாரற்று கிடந்தன. இதை பார்த்த அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த கூலி தொழிலாளர்கள் வி.வி. பேட் இயந்திரங்களை கைப்பற்றி தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்தனர். அதை பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது பல்வேறு தகவல்கள் மாவட்ட கலெக்டருக்கு கிடைத்தது. இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அவர் போலீசுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி பிரகாஷ்  தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் கிடைத்த முறையான ஆதாரங்களின் பேரில் வி.வி பேட் இயந்திரங்கள் கிடந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் 2 கூலி தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து மாவட்ட எஸ்.பி பிரகாஷ் கூறியதாவது; குஜராத்தை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனம்தான் இந்த வி.வி பேட் இயந்திரங்களை தயாரித்திருப்பது தெரியவந்தது. ஆனால் கைப்பற்றப்பட்ட இந்த வி.வி பேட் இயந்திரங்கள் விஜயபுரா மாவட்டத்திற்குரியது இல்லை. வேறு மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மனகூலி தனியார் நிறுவன கூடாரத்திற்கு இது எப்படி வந்தது என்பது தெரியவில்லை. இதில் சிலர் மீது சந்தேகம் எழுந்தது. விசாரணையில் கிடைத்த முறையான தகவலின் பேரில் மனகூலி தனியார் நிறுவன மேலாளரான குஜராத்தை சேர்ந்த சிம்மன் பாயிபட்டேவா, பீகாரை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் ஹரிந்தேதிரா பாய், ராஜேஷ்வரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

  • ranirashmiindianship

    இந்திய கடலோர காவல்படையின் விரைவு ரோந்து கப்பல் 'ராணி ராஷ்மணி' விசாகபட்டினத்தில் அர்பணிப்பு

  • kashmirkheerbhavanifstvl

    காஷ்மீரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கீர் பவானி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

  • MexicanChildrenAmerica

    2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்காவை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம்

  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்