SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி பாஸ்போர்ட் வழக்கில் தேடப்பட்டவர் சிக்கினார்

2018-05-24@ 00:24:00

சென்னை: போலி பாஸ்போர்ட் வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் பிடிபட்டார். சென்னையை சேர்ந்தவர் கார்டுவின் (42). கடந்த 2015ம் ஆண்டு, டெல்லி விமான நிலைய போலீசில், கார்டுவின் மீது போலி பாஸ்போர்ட் வழக்கு பதிவானது. அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது, கார்டுவின் வெளிநாடு தப்பி சென்று தலைமறைவானார். இதையடுத்து டெல்லி போலீஸ் கமிஷனர், கார்டுவினை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தார். மேலும், அவர், இந்தியாவில் எந்த பகுதிக்கு வந்தாலும், அவரை பிடித்து டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கும்படி தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.20 ஹாங்காங்கில் இருந்து கேட்வே பசிபிக் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, கார்டுவின் அந்த விமானத்தில் வந்து இறங்கினார். அவரது பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்தபோது, 3 ஆண்டுகளாக டெல்லி போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள், அவரை தனி அறையில், அடைத்து வைத்தனர். டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்