SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணல் கடத்தலை தடுத்த தாசில்தாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: ஆந்திராவுக்கு தப்பிய ஆசாமிக்கு வலை

2018-05-24@ 00:21:51

சென்னை: சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி அருகில், மணல் கடத்தலை தடுத்தபோது தாசில்தாரை லாரியை ஏற்றி  கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக நாள்தோறும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனால், மணல் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் எஸ்.பி சிபி சக்ரவர்த்தி நடவடிக்கை எடுத்து வருகிறார். கும்மிடிப்பூண்டி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகள் வழியாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரிகளில் மணல் கடத்தி வரப்படுவதாக கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜகோபாலுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சிப்காட் மேம்பாலம் அருகில் தாசில்தார் ராஜகோபால் மற்றும் உதவியாளர்கள்  திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி மணல் கடத்தி வந்த லாரியை தாசில்தார் மடக்கி சோதனை செய்தார். அப்போது, உரிய ஆவணம் இல்லாமல் மணலை கடத்தி வந்தது  தெரிந்தது. உடனே தாசில்தார் லாரியை சிப்காட் காவல் நிலையம் எடுத்து வருமாறு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த டிரைவர் முத்துவிடம் கூறி, தனது உதவியாளரை லாரியில் அனுப்பினார்.  அப்போது லாரியில் இருந்த அதன் உரிமையாளர் ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், மேலப்பாக்கத்தை சேர்ந்த தினேஷ் ரெட்டி, தனது டிரைவரிடம், ‘‘நீ லாரியை விட்டு இறங்கு.

சிப்காட் காவல் நிலையத்துக்கு நான் லாரியுடன் சென்று, பிரச்னைகளை சரி செய்துவிட்டு வருகிறேன்’’ என கூறிவிட்டு லாரியை மீண்டும் ஆந்திரா நோக்கி வேகமாக ஓட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாசில்தார் ராஜகோபால் ஜீப்பில் பின்தொடர்ந்து, லாரியை மடக்கிப்பிடிக்க முயன்றார். பெத்திக்குப்பம் டோல்கேட் அருகில், லாரியை மடக்கியபோது  லாரியை ஏற்றி தாசில்தாரை கொல்ல முயற்சி நடந்துள்ளது. உடனே சுதாரித்த அவரது டிரைவர், சாமர்த்தியமாக ஜீப்பை சாலையோரம் நிறுத்தியதால், தாசில்தார் ராஜகோபால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதையடுத்து லாரியில் இருந்த தாசில்தாரின் உதவியாளரை சூலூர்பேட்டை அருகே கீழே இறக்கிவிட்டு, அதன் உரிமையாளர் தினேஷ் ரெட்டி ஆந்திராவுக்கு தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக கும்மிடிப்பூண்டி போலீஸ் டிஎஸ்பி ராஜனிடம் தாசில்தார் ராஜகோபால் அளித்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திரா தப்பிச்சென்ற தினேஷ் ரெட்டியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்