SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து 25ல் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்: திமுக தலைமை அறிவிப்பு

2018-05-23@ 21:49:05

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கண்டித்து நாளை மறுநாள் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக்கட்சி சார்பில் அறவழி போராட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அமைதியான வழியில் பேரணி சென்ற மக்கள் மீது அராஜகமாகவும் கண்மூடித்தனமாகவும், ஏ.கே.-47 போன்ற துப்பாக்கிகளைக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இளம்பெண் ஒருவர் உள்ளிட்ட 11 பேரை பலியானார்கள். கடுகளவும் மனித நேயமோ பரிதாப உணர்வோ இல்லாமல், குருவிகளை சுட்டுக் கொல்வது போல் சுட்டு வீழ்த்தியிருக்கும் வெகுமக்கள் விரோத அதிமுக அரசுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.மலர்கண்காட்சிகளைத் திறந்து வைப்பதிலும், குளுகுளு உதகைக்கும் கொடைக்கானலுக்கும் சென்று ஓய்வெடுப்பதிலும், ஊழல் வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டுவதற்கு சம்பிரதாயத்திற்கு மாறாக மயிலை கபாலீஸ்வரர் கோயில் குருக்கள்களை வரவழைத்து, பூமி பூஜை நடத்துவதிலும் தீவிரம் காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத்  தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களை அழைத்துப் பேசி பிரச்னைக்கு சுமுகமான முறையில் தீர்வு காண முன் வரவில்லை.

முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு நடைபெற்ற பேரணியில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு வராமலிருக்க அதற்கு தேவையான எண்ணிக்கையில் காவல்துறையினரை அங்கு நிறுத்தி முன்னெச்சரிக்கையாக  எவ்வித தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அங்குள்ள உயர் காவல்துறை அதிகாரிகளோ மாவட்ட அதிகாரிகளோ போராட்டக்காரர்களை அழைத்துப் பேசி அமைதியான சூழலை உருவாக்கி ஒரு தீர்வு காணவும் எவ்விதத்திலும் முயற்சிக்கவில்லை. உயர்நீதிமன்றமே மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அறிவுறுத்தியும், மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு காண எந்த மட்டத்திலும்  உள்ள அதிகாரிகளோ அல்லது தென் மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களோ முயற்சி செய்யவே இல்லை. தொடர்ந்து போராடி வரும் மக்கள் மீது ஆணவத்தோடு பழிவாங்கும் எண்ணத்தில் மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்தவே அதிமுக அரசும், மாவட்ட அதிகாரிகளும், உயரதிகாரிகளும் காத்திருந்து, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இப்படியொரு கொடூரமான துப்பாக்கிச் சூட்டை திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்கள் என்றே அனைவரும் சந்தேகிக்கிறார்கள்.

ஆகவே அதிமுக அரசின் அலட்சியத்தாலும் அரவணைப்பற்ற அராஜக அணுகுமுறையினாலும் நிகழ்ந்துள்ள இந்த விபரீதமான அரச பயங்கரவாதத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக உடனே மூடக் கோரியும் வரும் 25ம் தேதி (வெள்ளிகிழமை) அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக, காங்கிரஸ், திராவிடர் கழகம், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஜனநாயக ரீதியாக அறவழியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித் துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-06-2019

  20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • SiberiaPolarBearStreet

  ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

 • RahulBirthday2k19

  கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

 • GrassBridgePeru

  ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

 • RoyalAscot2k19

  இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்