SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 61 புள்ளிகள் சரிவு

2018-05-23@ 10:44:31

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 61 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 35.11 புள்ளிகளாக உயர்ந்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 60.79 புள்ளிகள் சரிந்து 34,590.45 புள்ளிகளாக உள்ளது. உலோகம், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு, மற்றும் ஆட்டோ போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.29% வரை குறைந்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19.80 புள்ளிகள் குறைந்து 10,516.90 புள்ளிகளாக உள்ளது.

டாடா ஸ்டீல், இன்டஸ் இன்ட் வங்கி, டாக்டர் ரெட்டிஸ், ஹீரோ மோட்டோகார்ப், எம் & எம், எச்டிஎப்சி லிமிடெட், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ, ஏஷியன் பெயின்ட்ஸ், அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், கோடக் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, விப்ரோ, ஓஎன்ஜிசி மற்றும் ஆர்ஐஎல் போன்ற நிறுவன பங்குகள் விலை 2.45% வரை சரிந்து காணப்பட்டது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.89%, ஹாங்காங்கின் ஹாங் செங் 1.08% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 1.08% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 0.72% வரை குறைந்து முடிந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

  • airportchina2019

    சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

  • nevadaarea11

    அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்