SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: தூத்துக்குடி எஸ்.பி.க்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

2018-05-18@ 15:05:00

மதுரை: ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க தூத்துக்குடி எஸ்.பி.க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையின் பாதுகாப்பு கருதி தொழிற்சாலை, குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை சுற்றி 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என ஆலை நிர்வாகத்தின் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்புக்கு கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். மேலும் நிலைமைக்கு தகுந்தவாறு ஆலையை சுற்றி 1 கி.மீ., தொலைவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக வரும் 21ம் தேதிக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramalan_sirapu111

    இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ! : சிறப்பு படங்கள்

  • cake_decor11

    ஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா : மனதை கொள்ளை கொள்ளும் கேக் அலங்காரங்கள்

  • RajivGandhi27thanniversary

    ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

  • lasvegas_theme111

    அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மேடிசன் சதுக்கத்தில் வெவ்வேறு தீம்களில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கோள அரங்கம்

  • rajiv_27anni

    27வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்