SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வந்தவாசியில் கோவில் வளாகத்தில் நாட்டு வெடி குண்டுகள் கண்டெடுப்பு

2018-05-18@ 14:53:33

வந்தவாசி : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆலைய வளாகத்தில் வெடிக்காத நிலையில் நாட்டு வெடி குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தவாசியில் பழமைவாய்ந்த  ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் இருக்கிறது. இன்று காலை ஆலயத்தை தூய்மை படுத்தும் பணியில் பக்தர் ஒருவர் ஈடுபட்டிருந்தார் அப்போது கோவில் மதில் சுவர் ஓரமாக பந்து வடிவில் சனலும், திரியும் சுற்றப்பட்ட  மர்ம பொருட்கள் கிடப்பதை கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் அந்த பொருளை ஆய்வு செய்த போது அது வெடிக்காமல் இருந்த நாட்டு வெடுகுண்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பாக அந்த வெடிகுண்டுகளை எடுத்து சென்றனர். மேலும் கோவில் வளாகத்தில் வெடிகுண்டுகளை பதுக்கியது யார் என்றும், நாச வேலைகளுக்காக  பதுக்கப்பட்டதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்