SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது அரசியல் சட்டம், ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி : ஸ்டாலின்

2018-05-18@ 14:47:52

சென்னை : குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குட்கா வழக்கை மாநில அரசு தாமதிக்காமல் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். வருமான வரித்துறை தமிழக அரசிடம் கொடுத்த குட்கா டைரியின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து சிபிஐ விசாரணையை  தொடங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கொண்டுள்ளார்.

விசாரணை தடையின்றி நடைபெற புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்யுமாறு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுத வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து எடியூரப்பா பதவி விலக வேண்டும்
என்று வலியுறுத்திய ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது அரசியல் சட்டம், ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்ற பெருமிதம் கொண்டார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கர்நாடக ஆளுநரின் முடிவு தவறானது என்பதை காட்டுகிறது என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின், கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்