SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீலாங்கரை காவல்நிலையத்தில் விசாரணை கைதி மர்ம மரணம்: அடித்துக் கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

2018-05-18@ 14:44:18

சென்னை: சென்னை நீலாங்கரை காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட விசாரணை கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரை அடித்துக் கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் கொள்ளை வழக்கிற்காக அந்தோனி என்ற நபரை நேற்று கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்தோனி மீது 8 கொள்ளை வழக்குள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் கொள்ளையடித்த நகை, பணம் எங்கே என்பது குறித்து போலீசார் விசாரித்தபோது தனது வீட்டில் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் நேற்றிலிருந்து செம்மஞ்சேரியில் உள்ள அவரது வீடுகளுக்கு அந்தோனியை அழைத்துச் சென்று நகைகளையெல்லாம் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் தனக்கு வயிற்று வலி இருப்பதாகவும் அதற்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் அந்தோனி தொடர்ந்து கூறி வந்துள்ளார். எனினும் அவரை தொடர் விசாரணைக்கு நீலாங்கரை போலீசார் உட்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது இன்று அந்தோனியை சரமாரியாக அடித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்தோனி இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து போலீசார் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இவ்விவகாரம் வெளியே தெரிந்தால் காவல்துறையினருக்கு பிரச்சனை ஏற்படும் என்பதற்காக அந்தோனி உயிருடன் இருப்பது போல் நாடகமாடிய போலீசார், ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அங்குள்ள மருத்துவர்களும் அந்தோனி உயிரிழந்துவிட்டதாக கூறவே சிறிது நேரம் கழித்து போலீசாரும் அந்தோனி உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து, அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து போலீசாரிடம கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த போலீசார், விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது அந்தோனிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து, பின்பு மேல்சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம், அங்கு அவர் உயிரிழந்துவிட்டார் என கூறியுள்ளனர். ஆனால் போலீசார் சரமாரியாக அடித்ததன் காரணமாகவே அந்தோனி உயிரிழந்ததாக அவரது போலீஸ் வட்டாரம் மற்றும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்