SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆளுநர் எடியூரப்பாவை கர்நாடக முதலமைச்சாராக நியமித்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின் சாராம்சங்கள்

2018-05-18@ 14:10:03

டெல்லி: கர்நாடகத்தில் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   எடியூரப்பாவை முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பாக கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். பெரும்பான்மை இல்லாத பாஜவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சட்டவிரோதம் என்று அவர்கள் தெரிவித்தனர். காங்கிரஸ், மஜத பொருந்தாத கூட்டணி அமைந்துள்ளதாக முகில் ரோத்தகி வாதிட்டார். சட்டவிரோதமாக காங்கிரஸ், மஜத எம் எல் ஏக்களை அடைத்து வைத்துள்ளனர் என்று முகுல் ரோத்தகி கூறினார்.. காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்எல்ஏக்களில் சிலர் கூட பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நீதிமன்றத்தில் பாஜக தரப்பு முகுல் ரோத்தஹி வாதிட்டார்.

ஆளுநர் எடியூரப்பாவை கர்நாடக முதலமைச்சாராக நியமித்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின் சாராம்சங்கள்

*கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

*ரகசிய வாக்கெடுப்பின்றி வெளிப்படையாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்

*நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும்வரை ஆங்கிலோ இந்தியன் நியமன எம்.எல்.ஏக்களை ஆளுநர் நியமிக்க கூடாது

*நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும்வரை எடியூரப்பா எந்த கொள்கை முடிவையும் எடுக்க கூடாது

*சட்டப்பேரவை வரும் எம்.எல்.ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கர்நாடக மாநில டிஜிபிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணை

*கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் நாளை பதவியேற்க உச்சநீதிமன்றம் உத்தரவு

*மூத்த எம்.எல்.ஏ ஒருவரை தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

*ஆட்சியமைக்க எடியூரப்பாவை அழைத்த ஆளுநரின் முடிவு சரியா ? என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்