SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் மழை, 8 குளங்கள் நிரம்பி வழிகிறது : குடிநீர் பிரச்னைக்கு தீர்வு

2018-05-18@ 13:11:33

ஈரோடு: ஈரோடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு மழைப்பெய்யாததால் கடும் வறட்சியால், குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வந்தனர். பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால் கிணறு, போர்வெல், ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக வறண்டு போனது. இந்நிலையில் சில தன்னார்வ அமைப்புகள் சார்பில் ஏற்கனவே தூர்ந்து போய் கிடந்த சில குளங்களை தூர்வாரி தயார்ப்படுத்தி வைத்திருந்தனர். குறிப்பாக இரட்டைப்பாளி வலசு குளம், தொட்டிபாளையம் குளம், ராசக்காபாளையம் குளம் போன்றவை தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. போதாக்குறைக்கு, கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டிருந்ததால் நீர்கசிவு மூலமாகவும் குளங்களுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன்காரணமாக தற்போது வரிசையாக தூர்வாரப்பட்ட 7 குளங்களும் நிரம்பி வழிகிறது. இரட்டைப்பாளி வலசு குளம், கருங்கவுண்டன்பாளையம் குளம், தொட்டிபாளையம் குளம், ராசக்காபாளையம், கரட்டுப்பாளையம் குளம் பகுதியிலுள்ள 5 குளங்களும், நத்தக்காட்டுப்பாளையத்தில் உள்ள 3 குளங்கள் என மொத்தம் 8 குளங்கள் நிரம்பி விட்டன.

தற்போது 8 குளங்களும் நிரம்பியதால், அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் சூரம்பட்டி அணைக்கட்டுக்கு வந்து சேருகிறது. இதன் காரணமாக சூரம்பட்டி அணைக்கட்டும் நேற்று மாலையில் நிரம்பியது. இதன் காரணமாக உபரிநீர் பெரும்பள்ளம் ஓடையில் வெளியேறி கொண்டிருக்கிறது. 8 குளங்களும், அதையொட்டி உள்ள சூரம்பட்டி அணைக்கட்டும் நிரம்பியதால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயரத்துவங்கியுள்ளது. எனவே குடிநீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்