SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்வராயன் மலையில் கனமழை : அனைவாரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

2018-05-18@ 13:09:53

ஆத்தூர்: கல்வராயன் மலையில் பெய்த கனமழையால், ஆத்தூர் முட்டல் அனைவாரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கல்லாநத்தம் கிராமம் முட்டல் பகுதியில் உள்ள ஏரி மற்றும் அனைவாரி நீர்வீழ்ச்சியை, வனத்துறையின் மூலம் சுற்றுலா பகுதியாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. போதிய மழை இல்லாததால் அனைவாரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து இன்றி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அனைவாரி  நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இத்தகவல் அறிந்த ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள், தங்கள் குழந்தைகளுடன் அனைவாரி நீர்வீழ்ச்சிக்கு வந்து குளித்து மகிழ்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக முட்டல் ஏரியில் வனத்துறை சார்பில் படகு  சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திர வெயிலுக்கு இடையே அனைவாரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகரித்து உள்ளதாலும், முட்டல் ஏரியில் படகு சவாரிக்காகவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்