SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி ஆசிரியர்கள் : மாணவர் சேர்க்கை குறையும் வாய்ப்பு

2018-05-18@ 13:08:18

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளி நிர்வாகத்தினர் மெத்தனம் காட்டி வருவதால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகளவில் குறையும் நிலை உள்ளது. ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் அரசு துவக்கப் பள்ளிகள் 18, நடுநிலைப் பள்ளிகள் 6, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி 6, நடுநிலைப்பள்ளி 1, தனியார் நடுநிலைப் பள்ளிகள் 5 உட்பட 24 துவக்கப்பள்ளிகளும், 12 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளது. இதில் தனியார் பள்ளிகள் ஆண்டுத்தேர்வு விடுமுறை துவங்கிய நாள் முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை சேர்த்து வருகிறது.

தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகத்தினர் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் பகுதியில் தெருத்தெருவாக சென்று அதிகளவில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். ஆனால் விடுமுறை துவங்கியதற்கு பின் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கையில் எவ்வித ஆர்வமும் காட்டாமல் இருப்பதால் வரும் ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் தனியார் பள்ளிகளை விட மிகவும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.ராமேஸ்வரத்தில் பல தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் உள்ளதால் 3 வயது நிறைவடைந்த குழந்தைகளை இதில் அதிகளவில் சேர்த்து வருகின்றனர்.

வீடு தேடி வரும் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் பெற்றோர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு பள்ளிகளில் இலவச சீருடை, புத்தகங்கள் என பல சலுகைகள் வழங்கப்பட்டாலும், குறைந்த வருவாய் ஈட்டும் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதையே விரும்புகின்றனர். மேலும் பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் மூடும் அபாயம்


ஒரு சில பள்ளிகளை தவிர அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்து வருவதாலேயே தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். தேர்வு முடிந்து பூட்டப்பட்ட பல அரசு பள்ளிகள் இன்று வரை திறக்கப்படவில்லை. இதில் பணியாற்றும் ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கையில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால் வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கையில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பல பள்ளிகள் நிரந்தரமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்