SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாயர்புரம் அருகே பேய்க்குளம் தண்ணீரின்றி வறண்டது : கொக்குகள் படையெடுப்பு

2018-05-18@ 13:07:11

ஏரல்: சாயர்புரம் அருகே பேய்க்குளத்தில் தண்ணீர் வற்றி வருவதால் மீன்களை தின்ன கொக்கு உள்ளிட்ட பறவைகள் குவிந்துள்ளன. சாயர்புரம் அருகேயுள்ள பேய்க்குளம் 312 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்திற்கு ஸ்ரீவைகுண்டம் அணை வடகால் வழியாக தண்ணீர் வரும். மேலும் கடைசி பகுதியில் குளம் இருப்பதால் அதிகளவு வந்தால் மட்டுமே குளத்திற்கு தண்ணீர் வந்து சேரும். தற்போது வடகாலில் தண்ணீர் மிக குறைவாக வருவதால் குளத்திற்கு தண்ணீர் வரவில்லை.  இதனால் குளம் வற்றி பெரும்பாலான இடங்களில் தரைப்பகுதி தெரிகிறது. குளத்தில் பள்ளங்களில் குட்டை போல் தேங்கி உள்ளது. இதிலுள்ள மீன்கள் மற்றும் நண்டுகளை பிடிப்பதற்கு ஆயிரக்கணக்கான கொக்குகள் படையெடுத்து இரைகளை உண்டு வருகின்றன.

இதுகுறித்து முத்துநகர் இயற்கை பாதுகாப்பு சங்கம் துணைத்தலைவர் தாமஸ் மதிபாலன் கூறுகையில்; பேய்க்குளம் தண்ணீறின்றி வறண்டு வருவதால் குளத்தில் மீன்கள், நண்டுகள் மற்றும் நத்தைகளை இரை தேடி மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, கருப்பு கோட்டான், புள்ளி மூக்கு தாரா, மூக்கன் தாரா மற்றும் கொக்கு வகைகள் அதிகளவு வருகின்றன. இதில் மஞ்சள் மூக்கு நாரை அதிகமாக உள்ளது. இந்த பறவைகள் கூந்தன்குளத்தில் கூடு கட்டி குஞ்சு பொறிக்கும் இனத்தை சேர்ந்தது. கடந்தாண்டு கோடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளங்கள் எல்லாம் வறண்டு போனதால் பறவைகளுக்கு இரை கிடைக்காமல் பிற மாவட்ட குளங்களுக்கு இரை தேடி சென்றது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்