SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்லடத்தில் சூறாவளிக்கு வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன

2018-05-18@ 13:06:28

பொங்கலூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேடபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன்(53). இவர் விவசாயம் மற்றும் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தில் 7 வீடுகள் உள்ளன. இந்நிலையில்,  நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதில் 7 வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் பறந்து சேதமடைந்தன. சிமெண்ட் ஷீட்டுக்களான மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்திற்கு பறந்துசென்று விழுந்தன. வீடுகளில் தங்கியிருந்த தொழிலாளர்கள், தங்களது குடும்பத்துடன் உயிர் தப்பி அருகிலுள்ள வீடுகளில் தஞ்சமடைந்தனர். இச்சம்பவம் குறித்து பல்லடம் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த வாரம் 11,12ம்தேதிகளில் பலத்த சூறாவளியுடன் கனமழை பெய்தது.அப்போது பல்வேறு இடங்களில் சாலையோர மரங்கள் வேருடன் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கபட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு நகரே இருளில் மூழ்கியது  இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். போக்குவரத்தை சீர்படுத்தி,மின்வினியோகத்தை சரிசெய்ய விரைந்து செயல்பட்ட நெடுஞ்சாலைதுறை, மின்சாரவாரியம், நகராட்சி நிர்வாகங்கள் மழையால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி விரைவாக நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் தாராபுரத்தின் மையப்பகுதியில் உள்ள கண்ணன் நகர் குடியிறுப்பு பகுதியில் கடந்த 11ம் தேதி இரவு பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் 2 மரங்கள் வேருடன் சாய்ந்து சாலைகளை முழுமையாக அடைத்துக் கொண்டன. இதனால் அடுத்துள்ள தங்கள் வீடுகளுக்கு செல்வதாக இருந்தாலும் இரண்டு தெருக்களை கடந்துதான் பெண்களும், குழந்தைகளும் செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதிக்கு செல்ல முடியாதபடி மரங்கள் விழுந்து 8 நாட்கள் ஆகியும் அவற்றை அகற்றிட சம்பந்தப்பட்ட துறையினர் முன்வரவில்லை. எனவே உடனடியாக கண்ணன் நகர் பகுதியில் மழைக்கு விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு வழி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PlasticawarenessLondon

  லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 • stalin_arrestkaithu11

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

 • metrorayil_train11

  டெல்லியில் ஜனக்புரி மேற்கு - கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை சோதனை ஓட்டம்

 • northkores_minesexplodes1

  அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வெடிக்க செய்தது வட கொரியா!!

 • 25-05-2018

  25-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்