SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமயநல்லூர் அருகே 13 மயில்கள் மர்மச்சாவு : வனத்துறையினர் விசாரணை

2018-05-18@ 13:05:39

வாடிப்பட்டி: சமயநல்லூர் அருகே தேனூர் கண்மாய் கரையில் அடுத்தடுத்து 13 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயில்களை யாரும் விஷம் வைத்து கொன்றனரா என  வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சமயநல்லூர், பரவை, தேனூர், கட்டப்புளிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள தென்னந்தோப்புகளில் ஏராளமான மயில்கள் வசித்து வருகின்றன, இந்த நிலையில் நேற்று சமயநல்லூர் அருகே தேனூர் கண்மாய்கரை அருகிலுள்ள விளைநிலங்களில் அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இது தொடர்பாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற வனத்துறையினர் ஆங்காங்கே இறந்து கிடந்த 13 மயில்களின் உடல்களை கைப்பற்றினர். மேலும் மயில்களின் மர்மச்சாவு தொடர்பாக யாரேனும் மயில்களுக்கு விஷம் வைத்து கொலை செய்தனரா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்