SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியிருப்பு பகுதியை சுற்றி தோல் தொழிற்சாலைகள் : கேன்சர் பீதியில் கிராம மக்கள்

2018-05-18@ 13:04:06

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சூரியம்பாளையம் கிராமத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சுற்றி உள்ள பாலக்காட்டூர், இந்திராபுரம், தெய்வபுரம், மரவாபாளையம், சொட்டையம்பாளையம், தண்ணீர் பந்தல்பாளையம், வீரபண்ணாடியூர், அம்பேத்கர்நகர், நரிப்பள்ளம், ஆர்என் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருதுகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நீர், நிலம், காற்று என சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மார்ச், ஏப்ரல் ஆகிய 2 மாதங்களில் மட்டும் இக்கிராமங்களை சேர்ந்த 4 பேர் புற்றுநோயினால் இறந்துள்ளதாகவும் மேலும் 2 பேர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சூரியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கேசவன் கூறியதாவது, குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை பல ஆண்டுகளாக சுவாசித்து வருவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் சுவாசக்கோளாறு, தோல் அரிப்பு, சிறுநீரக கோளாறு என சிறிய அளவில் தோன்றும் பாதிப்புகள் நாளடைவில் கேன்சராக மாறிவிடுகின்றன.

கடந்த 2 மாதத்தில் மட்டும் கேன்சர் பாதிப்பினால் சூரியம்பாளையம் சுற்றி உள்ள கிராமங்களில் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும் சிலருக்கு பாதிப்பு உள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த தலைமுறையே இல்லாமல் போய்விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. கேன்சர் பாதிப்புகளுக்கு தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் கொண்ட காற்றும், கழிவு நீரும் தான் காரணம். அடுத்தடுத்து உயிரிழப்புகளால் கிராம மக்களிடையே ஒரு வித அச்சம் நிலவி வருகிறது. எனவே உரிய விசாரணை நடத்தும்படி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்