SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளஸ்2 தேர்வு முடிவு வெளியீடு : கலைக்கல்லூரிகளில் குவிந்த மாணவ, மாணவிகள்

2018-05-18@ 13:03:13

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிளஸ்2 முடிவு வெளியான நிலையில் மாணவ மாணவியர் கலை கல்லூரிகளில் அட்மிஷனுக்காக நேற்று குவிந்தனர். நேற்று முன்தினம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 20,923 பேர் தேர்வு எழுதினர். இதில் 19,985 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்காலிக மதிப்பெண் பட்டியலுடன் மாவட்டம் முழுவதும் மாணவ மாணவியர் நேற்று முதல் கல்லூரிகளில் சேர்க்கை விண்ணப்பம் பெற பெற்றோருடன் குவிந்த வண்ணம் உள்ளனர்.

பொறியியல் கல்விக்கான ஆர்வம் சற்று குறைந்துள்ள நிலையில் மாணவ மாணவியரின் கவனம் முழுவதும் கலைப்படிப்புகள் மற்றும் பிற நர்சிங் தொழிற்சார்ந்த படிப்புகள் மீது திரும்பியுள்ளது. நேற்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கலை கல்லூரிகளிலும் விண்ணப்ப படிவங்கள் வாங்குவதற்காகவும், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை வழங்குவதற்காகவும் பெருமளவில் மாணவ மாணவியர் கூட்டம் அலைமோதியது.
இதனால் முக்கிய, பிரபல கல்லூரி வளாகங்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளன. குறிப்பாக பிகாம், பிஎஸ்சி  உள்ளிட்ட குரூப்களுக்கு தற்போது மீண்டும் மாணவ மாணவியர் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்