SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோடு சந்தைக்கு கறவை மாடுகள் வரத்து பாதியாக குறைந்தது : கர்நாடக வியாபாரிகள் ஏமாற்றம்

2018-05-18@ 13:02:31

ஈரோடு: ஈரோடு மாட்டு சந்தையில் கறவை மாடுகளின் வரத்து பாதியாக குறைந்ததால் கர்நாடக மாநில வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். ஈரோடு கருங்கல்பாளையம் கறவை மாட்டு சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கமாகும். வறட்சி காரணமாக கடந்த மாதம் வரை விற்பனைக்கு வரும் மாடுகளின் வரத்து அதிக அளவில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக பரவலாக கோடை மழை பெய்து வருவதால் வறட்சி நீங்கி பசுமை படர தொடங்கி உள்ளதால் தீவன தட்டுப்பாடு நீங்கி உள்ளது. இதனால் விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டதால், கடந்த ஒரு மாதகாலமாக அந்த மாநில வியாபாரிகளின் வருகை இல்லாமல் இருந்து வந்தது. தேர்தல் முடிவடைந்ததையடுத்து நேற்று ஈரோடு மாட்டு சந்தைக்கு அதிக அளவில் கர்நாடக மாநில மாட்டு வியாபாரிகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ஆனால் மாடுகளின் வரத்து பாதியாக குறைந்திருந்ததால் ஏமாற்றமடைந்த கர்நாடக வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே மாடுகளை வாங்கிச்சென்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்