SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழநி அருகே பாலசமுத்திரத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோயில் திருவிழா

2018-05-18@ 13:01:38

பழநி: பழநி அருகே பாலசமுத்திரத்தில் நடந்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பழநி அருகே பாலசமுத்திரத்தில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக முத்தாலம்மன் கோயில் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாட்டுதலுடன் துவங்கியது. பக்தர்கள் விரதமிருந்து, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான அம்மன் உலா வரும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. கேரள பராம்பரிய இசையுடன், வாணவேடிக்கைகளுடன் அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

ஊர்வலத்தின்போது பல்வேறு சமூகத்தினரின் மண்டகப்படிகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி போன்றவற்றுடன் ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தீச்சட்டி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். பல்வேறு அமைப்புகளின் சார்பில் அலங்கார ரத ஊர்வல நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை முத்தாலம்மன் ராமநாத நகர் சென்று கொழுவிருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் நீராடுதலுடன் விழா முடிவடையும். விழாவைக் காண பழநி பகுதி கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்