SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலரின் தலையில் அரிவாளால் வெட்டு : செல்போன் திருடன் கைது

2018-05-18@ 12:51:39

சென்னை : சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலரின் தலையில் அரிவாளால் வெட்டிய செல்போன் திருடன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 4 மணி அளவில் ரயில் பயணி ஒருவர் தன்னுடைய செல்போனை 3 பேர் பறித்து கொண்டு ஓடுவதாக காவலரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து அங்கு பணியிலிருந்த  மீனா என்ற ரயில்வே பாதுகாப்பு படை காவலர் அந்த இளைஞர்களை பிடிக்க முயற்சித்த போது அவர்களில் ஒருவன் தான் வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டியதால் இருவர் தப்பித்துவிட்டனர்.

இந்நிலையில் தலையில் காயத்துடன் ஒரு கொள்ளையனை பிடித்து பெரியமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த இளைஞன் பெயர் விஜய் என தெரியவந்தது. இதனையடுத்து அவனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய இரு கொள்ளையர்களையும் பெரியமேடு போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். தலையில் வெட்டுப்பட்ட அந்த காவலருக்கு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் கிகிச்சை அளிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்