SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: பொதுமக்களின் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

2018-05-18@ 12:43:12

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களின் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்நதுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்திய நிலைகள் மீது மோர்டார்ஸ் மற்றும் துப்பாக்கியால் சுட்டனர்.  இதற்கு இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் சீதாராம் உபதாய் வீரமரணம் அடைந்தார்.

மேலும் பொதுமக்களில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியது. இந்நிலையில் அர்னியா துறையில் மேலும் 2 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அப்பாவி மக்கள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் அத்துமீறலால் சர்வதேச எல்லையின் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஜம்மு-காஷ்மீரில் எவ்வித தாக்குதலும் நடத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், இன்று அதிகாலை நடைபெற்ற தாக்குதலில் வீரர் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்