SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம்: முதல்வர் எடியூரப்பா பேட்டி

2018-05-18@ 12:32:18

டெல்லி: கர்நாடகத்தில் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் விட்டுள்ளது. எடியூரப்பாவை முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. நாளைக்குள் எம்.எல்.ஏக்கள் பதவியேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள் ஐதராபாத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்புடன் நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டப்பேரவையில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவு குறித்து பேசிய, எடியூரப்பா நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று தெரிவித்தார். வெற்றி பெற்று அடுத்த 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி அமைப்போம் என்று கூறினார். வாக்கெடுப்பு தொடர்பாக ஆளுநர், முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நாளைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்