SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹோட்டலில் உள்ள எம்எல்ஏக்களுக்கு போன் செய்து சுவர் ஏறி குதிக்க சொன்ன பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

2018-05-18@ 12:30:30

சென்னை: பெங்களூரு சொகுசு விடுதியில் இருந்தபோது, பாஜகவினர் போன் செய்து காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களை தொந்தரவு செய்ததாக அவ்விறு கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன. கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தபோதும், பாஜகவிற்கே ஆளுநர் அழைப்பு விடுத்து 15 நாட்களில் பெரும்பானமையை நிருபிக்குமாறு கூறியுள்ளார். இதனால் தற்போது கர்நாடகாவில் குதிரை பேரம் நடக்கும் நிலை உருவாகி உள்ளது.

இதனால் காங்கிரஸ் கட்சியும், மஜத கட்சியும் தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாத்துக்கொள்ள முடிவெடுத்ததை அடுத்து பெங்களூரு ஈகிள்டன் சொகுசு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அப்போது பாஜகவினர் போன் செய்து காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களை தொந்தரவு செய்துள்ளனர். ஹோட்டல் சுவரில் இருந்து ஏறி வெளியே குதிக்கமாறு கூறிய அவர்கள், சிலரை வெளியே வர சொல்லி போன் செய்து மிரட்டியுள்ளனர். கடைசியில் யாரும் வரவில்லை என்றதும், அந்த ஹோட்டலுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பையும் திரும்ப பெற்றதாக காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் குற்ற்சாட்டியுள்ளனர். இதன் காரணமாகவே ஹைதராபாத்திற்கு மாறியதாக காங்கிரஸ் மற்றும் மஜத கூறியுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்