SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்சியமைக்க யாரை அழைக்க வேண்டும் என்பது ஆளுநரின் தனிப்பட்ட உரிமை : பாஜக வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதம்

2018-05-18@ 12:29:37

டெல்லி: கர்நாடகத்தில் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   எடியூரப்பாவை முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார்.பெரும்பான்மை இல்லாத பாஜவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சட்டவிரோதம் என்று அவர் தெரிவித்தார். காங்கிரஸ், மஜத பொருந்தாத கூட்டணி அமைந்துள்ளதாக முகில் ரோத்தகி வாதிட்டார். சட்டவிரோதமாக காங்கிரஸ், மஜத எம் எல் ஏக்களை அடைத்து வைத்துள்ளனர் என்று முகுல் ரோத்தகி கூறினார்.காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்எல்ஏக்களில் சிலர் கூட பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நீதிமன்றத்தில் பாஜக தரப்பு முகுல் ரோத்தஹி வாதிட்டார்.

பாஜக தரப்பு முகுல் ரோத்தஹி வாதம் பின்வருமாறு :

*எடியூரப்பா தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்

*ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களை முகுல் ரோத்தஹி தாக்கல் செய்தார்.

*பெரும்பான்மை இருப்பதாக காங்- மஜத கூறிய நிலையில் பாஜகவை மட்டும் ஆளுநர் அழைத்தது ஏன்? என்று காங்கிரஸ்- மஜத தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி பாஜக தரப்பு வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பியது .

*எதன் அடிப்படையில் நிலையான அரசு அமையும் என ஆளுநர் முடிவு செய்தார்? என்ற உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு,ஆட்சியமைக்க யாரை அழைக்க வேண்டும் என்பது ஆளுநரின் தனிப்பட்ட உரிமை என்று பாஜக வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்தார்.

*தேவைப்படும் போது சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றார்.

*எடியூரப்பாவுக்கு போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்று கூறிய முகுல் ரோத்தஹி, எடியூரப்பா தனது கடிதத்தில் ஆதரவு எம்எல்ஏக்கள் குறித்த பட்டியலை குறிப்பிடவில்லை

*காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்எல்ஏக்களில் சிலர் கூட பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று உறுதிப்பட தெரிவித்தார் ;

*கர்நாடக பேரவையில் வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

*இதனிடையே கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கால அவகாசம் தேவை என பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டார்.

*எனினும் பெரும்பான்மையை நிரூபிக்க திங்கள் வரை அவகாசம் கேட்ட எடியூரப்பா தரப்பு கோரிக்கையை நிராகரித்து. உச்சநீதிமன்றம் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் தந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்