SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி மேலாண்மை வாரியமா அல்லது ஆணையமா? 2 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

2018-05-18@ 12:11:56

டெல்லி: காவிரி வழக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டை முறைப்படுத்துவது தொடர்பான திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. அதில், மேலாண்மை வாரியம் என்பதற்கு பதில், மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் ஏற்பட்டால் நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால் மத்திய அரசின் ஆலோசனையை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் செயல்படும் என்றும் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கை குறித்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை இன்று அல்லது வரும், 22, 23ம் தேதிகளில் அறிவிப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து காவிரி வழக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியமா அல்லது ஆணையமா என்பது குறித்தும், காவிரி வாரியம் அல்லது ஆணையத்தின் அதிகாரம் பற்றி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்