SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பின் அறநெறி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளது: வழக்கறிஞர் அஷ்வானி குமார்

2018-05-18@ 12:08:37

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பின் அறநெறி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் அஷ்வானி குமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கால அவகாசம் கோரிய பாரதிய ஜனதாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், நாளை மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்கெடுப்பிற்கு வரும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடக டிஜிபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வானி குமார் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டியதாகும் என்று கூறியுள்ளார். உச்சநிதிமன்றத்தின் மீதான நம்பிக்கை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும் என்று அபிஷேக் மனு சிங்கி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளைக்கு எம்.எல்.ஏவாக பதவியேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என்றும், பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முக்கிய முடிகளை எடியூரப்பா எடுக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்