SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கோவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள எபோலா வைரஸ்: இதுவரை 23 பேர் பலி!

2018-05-18@ 11:10:00

கின்சசா: காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய எபோலா வைரஸ் நோய், காங்கோ ஜனநாயக குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் கண்டறியப்பட்டுள்ளதை அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஒலி இலுங்கா கலிங்கா உறுதி செய்துள்ளார். அந்த பகுதியில் பல மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். மீண்டும் பெரும் அளவில் எபோலா பரவுவதன் அறிகுறியாக இது உள்ளது.

பண்டகாவிலிருந்து 150கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு கிராம பகுதியில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் முதல்முறையாக எபோலோ கண்டறியப்பட்டதிலிருந்து, இதுவரை 23 பேர் அதற்கு பலியாகியுள்ளனர். தற்போது 52 பேரை இந்த நோய் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே அந்த நாட்டுக்கு 4 ஆயிரம் பேருக்கு செலுத்தத்தகுந்த எபோலா வைரஸ் தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் சோதனை ரீதியில் அனுப்பி வைத்துள்ளது. 2013ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய இந்நோயால் 2016ம் ஆண்டு வரை 11,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்