SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முகப்பேர் அருகே பால்கனி இடிந்து விழுந்ததில் பெண் பரிதாப பலி: வீட்டின் உரிமையாளர் கைது

2018-05-18@ 10:45:30

சென்னை: சென்னை முகப்பேரில் பால்கனி இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிந்த வழக்கில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். முகப்பேர் கர்ணன் தெருவில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் நடராஜன்(53)-லட்சுமி(48) தம்பதியினர் 14 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தனர்.. இவர்கள் பால் மற்றும் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். மதியம் 3.30 மணியளவில் நடராஜன், லட்சுமி ஆகியோர் வீட்டின் முதல் தளத்தில் உள்ள பால்கனியில் அமர்ந்து பூ கட்டிக் கொண்டிருந்தனர். அங்கு இவர்களது பேத்தியான 8 மாத குழந்தை லட்சனா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பால்கனியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் நடராஜன், லட்சுமி, லட்சனா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் தலையில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நடராஜனுக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. சிறுமி லட்சனாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் முகப்பேர் மேற்கு 3வது பிளாக்கில் வசிக்கும் மகேஷ்(24) என்பவர் அந்த வழியாக மோட்டர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, அவர் மீதும் அந்த இடிபாடுகள் விழுந்ததில் அவரும் படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த நொளம்பூர் காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வீட்டின் உரிமையாளர் உதயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்