SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்க காங்., ம.ஜ.த. தீவிரம்: நள்ளிரவில் விடுதியை காலி செய்து ஐதராபாத் பயணம்!

2018-05-18@ 08:04:53

பெங்களூரு: கர்நாடகத்தில் ஈகிள்டன் ஓட்டலில் நுழைந்த முக்கிய புள்ளிகள் குதிரை பேரத்தை நேரடியாக தொடங்கியதால் காங்கிரஸ் எம்.ஏல்.ஏ.க்கள் மாநிலத்தை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கும், ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத் மற்றும் கொச்சிக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், கண்ணாம்பூச்சி ஆட்டம் தொடங்கிவிட்டது. இதனால் உஷாரான காங்கிரஸ் மேல் இடம் 78 எம்.எல்.ஏ.க்களையும் ஈகிள் டன் ஓட்டலில் தங்க வைத்தது. திடீர் என போலீஸ் பாதுகாப்பு விலகியதால், முக்கிய புள்ளிகள் ஓட்டலில் புகுந்து பேரம் பேசத் தொடங்கியது.

அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மேல் இடம் விமானம் ஒன்றை புக் செய்து எம்.எல்.ஏ.க்களை கொச்சி கொண்டு செல்ல முடிவு செய்தது. ஆனால் விமானம் புறப்பட அனுமதி கிடைக்காததால் பேருந்து மற்றும் கார்களில் எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டு சென்றனர். இதேபோல் ம.ஜ.த எம்.எல்.ஏ.க்கள் 37 பேரையும் குமாரசாமி சந்தித்து பேசினார். அப்பபோது பேசிய குமாரசாமி, குதிரை பேரத்தை ஊக்குவிக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்தவே காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக உள்ளனர் என்றார்.

மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பிரச்சனை இல்லை; பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதே முக்கியம் என்றார். இந்நிலையில் கர்நாடகா காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் ஐதராபாத் சென்றடைந்தனர். காங்கிரஸ் எம்.ஏ.எல்களில் 3 பேரை தவிர மற்ற 75 எம்.எல்.ஏக்கள் ஐதராபாத் பயணம் செய்தனர். மதசார்பற்ற ஜனதா தளம் எம்.ஏ.க்கள் 37 பேரும் ஐதராபாத் சென்றடைந்தனர். உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வர உள்ளது. விசாரணையின் போது எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமைக் கோரி வழங்கப்பட்ட கடிதத்தை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவி்டப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு பிறகு எடியூரப்பாவின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தெரிய வரும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

  • ranirashmiindianship

    இந்திய கடலோர காவல்படையின் விரைவு ரோந்து கப்பல் 'ராணி ராஷ்மணி' விசாகபட்டினத்தில் அர்பணிப்பு

  • kashmirkheerbhavanifstvl

    காஷ்மீரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கீர் பவானி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

  • MexicanChildrenAmerica

    2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்காவை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம்

  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்