SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராயல் சேலஞ்சர்ஸ் போராடி வெற்றி

2018-05-18@ 07:06:39

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் அணி கடுமையாக போராடி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூருவில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார். ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கேப்டன் விராத் கோஹ்லி, பார்த்திவ் படேல் துவக்க வீரர்களாக களமிறங்கினர். சந்தீப் ஷர்மா வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் பார்த்திவ் (1 ரன்) ஆட்டமிழந்தார். ரஷித்கான் சுழலில் கோஹ்லியும் (12) விரைவிலேயே நடையை கட்டினார். 38 ரன்னில் 2 விக்கெட் என தடுமாற்றமான நிலையில், டிவில்லியர்ஸ், மொயீன் அலி ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் அதிரடியில் அசத்தி அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி 107 ரன் சேர்த்த நிலையில், 15வது ஓவரில் டிவில்லியர்ஸ் (69 ரன்) விக்கெட்டை வீழ்த்திய ரஷித் கான், அதே ஓவரில் மொயீன் அலியையும் (65 ரன்) வெளியேற்றினார். அடுத்து வந்த கிராண்டோமி (40 ரன், 17 பந்து) அதிரடியாக ஆட, ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் ரஷித்கான் 3, சித்தார்த் கவுல் 2, சந்தீப் ஷர்மா 1 விக்கெட் கைப்பற்றினர். பஷில் தாம்பி 4 ஓவரில் 70 ரன்களை வாரி வழங்கினார். அடுத்ததாக 219 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியில் ஷிகார்தவான்,ஹேல்ஸ் ஆகியோர் குறைந்த ரன்னில் ஆட்டமிழந்தனர். எனினும் அணியின் கேப்டன் வில்லியம்ஸ் அதிரடியாக 42 பந்துகளில் 81 குவித்தார்.

இதில் ஏழு பவுண்டரியும், நான்கு சிக்ஸரும் அடங்கும். அவருக்கு துணையாக பாண்டேவும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 38 பந்தில் 62 குவித்தார். எனினும் 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 204 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இப்போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வாழ்வா சாவா போட்டியாகும். இதில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும். சன்ரைசர்ஸ் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்