SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் டி.டி.வி. ஆதரவாளர்கள் அதிமுகவினரிடையே மோதல் 10 கார்களின் கண்ணாடி உடைப்பு: மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது

2018-05-18@ 07:05:12

கோவை: டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள், அதிமுகவினர் இடையே நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் 10 கார்கள் உடைக்கப்பட்டது.
கோவை வடவள்ளி, தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடக்க இருந்தது. இதில், கலந்து கொள்ள முன்னாள் எம்.எல்.ஏ சேலஞ்சர் துரை, வடவள்ளி பகுதி செயலாளர் கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர் அன்னம்மாள், முன்னாள் எம்.எல்.ஏ ரோகிணி, பிரபுகுமார் ஆகியோர் வந்தனர். அப்போது, வடவள்ளி பகுதியை சேர்ந்த அதிமுகவினர் பலர் திருமண மண்டபம் முன்பு திரண்டு கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.  

தகவலறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கூட்டம் நடத்த முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் எனவும், அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தக் கூடாது எனவும் அமமுக-வினரிடம் போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சேலஞ்சர் துரை தலைமையில் வடவள்ளி பகுதி செயலாளர் கருப்புசாமி வீட்டில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து இரவு 8 மணி அளவில் டி.டி.வி.ஆதரவாளர்கள் தங்களது வாகனங்களில் வீடு நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, வடவள்ளி மகாராணி அவென்யூ சாலையில் அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு கார்களை வழி மறித்தனர். தொடர்ந்து, டி.டி.வி ஆதரவாளர்களது கார்கள் மீது கற்கள் வீசப்பட்டது. மேலும் பத்துக்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைந்தனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் கலவரம் போல காட்சி அளித்தது.  இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவத்தில் தினகரன் ஆதரவாளரது டிரைவர் ஒருவர் காயமடைந்தார். அவரை உடனடியாக அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கார்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து மருதமலை ரோட்டில் உள்ள கருப்பராயன் கோயில் அருகே முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை தலைமையில் தினகரன் ஆதரவாளர்கள் உடைக்கப்பட்ட கார்களை நடு ரோட்டில் நிறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கலைந்துபோக மறுத்ததால் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

  • metrorayil_train11

    டெல்லியில் ஜனக்புரி மேற்கு - கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை சோதனை ஓட்டம்

  • northkores_minesexplodes1

    அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வெடிக்க செய்தது வட கொரியா!!

  • 25-05-2018

    25-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்