SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தரமான கட்டுமான பணிகளுக்காக 200 பொறியாளர்கள் நியமனம் செய்ய முடிவு : 4 கூடுதல் ஆணையர் பணியிடங்கள் உருவாக்கம்

2018-05-18@ 02:53:37

சென்னை: திருப்பணி, கட்டுமான பணியை தரமாக மேற்கொள்ளும் வகையில் 200 பொறியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38,630 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரம் பிரதான கோயில்களும் அடக்கம். இந்த கோயில்களில் திருப்பணி மேற்கொள்வது, யாத்ரி நிவாஸ் கட்டுவது, புதிதாக அன்னதான மண்டபம், திருமண மண்டபம், தேர் நிறுத்தும் இடம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை கண்காணிக்க அறநிலையத்துறை சார்பில் பொறியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், திருப்பணிகள், அன்னதானம், திருமண மண்டப கட்டுமான பணிகள் தரமாக மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், இந்த கட்டிடங்கள் சில மாதங்களில் பழுது ஏற்படுகிறது. சில இடங்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழவும் செய்கிறது. இதற்கு பொறியாளர்கள் இல்லாத ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் தான் அறநிலையத்துறையில் 200 பொறியாளர்கள் பணியிடங்களை உருவாக்க முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் அறநிலையத்துறையில் நேரடி நியமனம் மூலம் பொறியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகிறது என்று அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:  இந்து அறநிலையத்துறையில் நிர்வாக வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை என 4 மண்டலங்களாக அமைக்கப்படுகிறது.இதில், கூடுதல் ஆணையர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள், கட்டுப்பாட்டில் இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் பணிபுரிகின்றனர். மேலும், 11 இணை ஆணையர் பணியிடங்கள் 16 ஆகவும், 28 கோட்ட உதவி ஆணையர் பணியிடங்கள் 32 பணியிடங்களாகவும் அதிகரிக்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு அனுமதி கேட்டு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் பதவி உயர்வு அடிப்படையில் அந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • babyballon_trump

    பேபி பலூனில் அதிபர் டிரம் முகம் : அமெரிக்க அதிபரை விமர்சித்து வினோத பரப்புரை

  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்