SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 13 நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.6,448 கோடி ஒதுக்கீடு : நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது

2018-05-18@ 02:50:49

சென்னை: தமிழகத்தில் உள்ள 13 நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.6,448 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை தொடங்கி உள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 62,017 கி.மீ நீள சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் முக்கிய துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழிற்சாலைகள் அமைந்துள்ள சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, மாநிலங்களில் 654 கி.மீ நீள சாலைகள் மேம்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான அறிக்கை தயாரித்து தனியார் நிறுவனத்திடம் நெடுஞ்சாலைத்துறை ஒப்படைத்தது. இந்த திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் 13 மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு ரூ.6,448 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.407 ேகாடி செலவில் 74 கி.மீ நீள சாலையான திருச்செந்தூர்-அம்பாசமுத்திரம் (வழி-பாளையங்கோட்டை) இரண்டு வழித்தடமாகவும், ரூ.213.71 கோடி செலவில் 46.90 கி.மீ நீளமுள்ள மேலூர் முதல் காரைக்குடி (வழி திருப்பத்தூர், குன்றக்குடி) சாலை இரண்டு வழித்தடமாகவும், ரூ.143.63 கோடி செலவில் 27.59 கி.மீ நீளமுள்ள தஞ்சாவூர்-மன்னார்குடி  சாலை இரண்டு வழித்தடமாகவும், ₹177 கோடி செலவில் 27 கி.மீ நீளமுள்ள கும்பகோணம்-மன்னார்குடி சாலை இரண்டு வழித்தடமாகவும், ரூ.307 கோடி செலவில் 38.07 கி.மீ நீளமுள்ள சாலை கும்பகோணம்-சீர்காழி இரண்டு/நான்கு வழித்தட சாலைகளும், ரூ.199 கோடி செலவில் 31.28 கி.மீ நீளமுள்ள சாலை மயிலாடுதுறை-திருவாரூர் 2 வழித்தடமாகவும், ரூ.249 கோடி செலவில் 46.44 கி.மீ நீளமுள்ள சாலை மோகனூர்-நாமக்கல்-சேந்தமங்கலம்-ராசிபுரம் நான்கு வழித்தடமாகவும் மேம்படுத்தப்படுகிறது.

ரூ.205 கோடி செலவில் 10 கி.மீ நீளமுள்ள திருச்செங்கோடு-ஈரோடு சாலை நான்கு வழித்தடமாகவும், ரூ.107 கோடி செலவில் 31.49 கிமீ நீளமுள்ள துறையூர்-பெரம்பலூர் சாலை இரண்டு வழித்தடமாகவும், ரூ.539 கோடி செலவில் 54 கி.மீ நீளமுள்ள ஓமலூர்-திருச்செங்கோடு (வழி சங்ககிரி, திருச்செங்கோடு பைபாஸ் உட்பட) சாலை நான்கு/இரண்டு வழித்தட சாலையாகவும், ரூ.389 கோடி செலவில் 47 கி.மீ நீளமுள்ள செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலை 4 வழித்தடமாகவும், ரூ.419 கோடி செலவில் 39.75 கி.மீ நீளமுள்ள செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலை நான்கு வழித்தடமாகவும், ரூ.529 கோடி செலவில் 110 கி.மீ நீளமுள்ள செய்யூர் -போளூர் சாலை இரண்டு வழித்தடமாகவும், ரூ.114 கோடி செலவில் 20.88 நீளமுள்ள விருத்தாசலம்-உளுந்தூர் பேட்டை சாலை இரண்டு வழித்தடமாகவும், ரூ.379 கோடி செலவில் 40.60 கி.மீ நீளமுள்ள கடலூர்-மடப்பட்டு சாலை நான்கு வழித்தடமாகவும் மேம்படுத்தப்படுகிறது. இதை தவிர்த்து சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.379 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ் 654 கி.மீ நீள சாலைகள் மேம்படுத்தப்படுகிறது. இந்த சாலைகளின் ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தும் வகையில் தனிப்பாதை அமைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. 7 ஆண்டுகள் இந்த சாலை பராமரிப்பு பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது’ என்றார்.

சுங்கச்சாவடிகள் வருகிறது

ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி மூலம் இந்த 13 மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படுகிறது. இப்பணி முடிந்த பிறகு, அந்த சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. அந்த சாலைகளில் தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட உள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramalan_sirapu111

    இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ! : சிறப்பு படங்கள்

  • cake_decor11

    ஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா : மனதை கொள்ளை கொள்ளும் கேக் அலங்காரங்கள்

  • RajivGandhi27thanniversary

    ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

  • lasvegas_theme111

    அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மேடிசன் சதுக்கத்தில் வெவ்வேறு தீம்களில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கோள அரங்கம்

  • rajiv_27anni

    27வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்