SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு : ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு

2018-05-18@ 02:49:42

சென்னை: மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியானது, கடந்த மார்ச் 31ம்  தேதியோடு முடிவடைந்தது. இதனையடுத்து அனுமதியை புதுப்பிக்க ஸ்டெர்லைட்  நிர்வாகம் தாக்கல் செய்திருந்த மனுவை மாசுகட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது. இந்த  நிராகரிப்பு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், மாசு  கட்டுப்பாடு வாரிய மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சுதந்திரம் மற்றும் நிபுணர்கள் ஜெயக்குமார், எத்திராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ, ராமசுப்பு ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில், மாசுகட்டுப்பாடு வாரியம் 5 குறைகள் கூறுகிறது. அவை சரி செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒரு குறையை மட்டும் சரி செய்ய 2019ம் ஆண்டு வரை காலக்கெடு உள்ளது என்றனர். இதையடுத்து ஆஜரான வைகோ, ஸ்டெர்லைட் ஆலை, மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழக அரசு ஆகியவை தங்களது முழுமையான வாதங்களை எடுத்து வைத்த பிறகு, தனது தரப்பு வாதங்களை வைப்பதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்