SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாமக ஒரு காலத்திலும் எதிர்த்ததில்லை : ராமதாஸ் அறிக்கை

2018-05-18@ 02:48:46

சென்னை: “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாமக ஒரு காலத்திலும் எதிர்த்ததில்லை” என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாமகவை பொறுத்தவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை  ஒரு காலத்திலும் எதிர்த்ததில்லை. மாறாக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்கு  அத்தகைய சட்டம் தேவை என்பதுதான் பாமக நிலைப்பாடு. அதேநேரத்தில் சட்டத்தின் தவறான பயன்பாட்டை கடுமையாக எதிர்த்து வருகிறது. அதிலும், குறிப்பாக கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இத்தகைய நிலைப்பாட்டை பாமக மேற்கொண்டுள்ளது.

ஆனால், இதை புரிந்துகொள்ளாத சிலர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையே பாமக எதிர்ப்பதாக அவதூறு பரப்புகின்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டால், தேசிய அளவில் தலித் அல்லாத 77.5% மக்களும், மாநில அளவில் தலித் அல்லாத 81% மக்களும் பழிவாங்கப்படுகின்றனர். இந்த உண்மை மத்திய ஆட்சியாளர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும், சில சக்திகள் நடத்திய போராட்டத்திற்கு  பணிந்து சட்டத்தை திருத்த முயல்வதும், அதை அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கத் துடிப்பதும் திருத்த முடியாத தவறுகளாக மாறி விடும். எனவே, வன்கொடுமை சட்டத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்திய பிறகுதான் யாரையும் கைது செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் முன்பிணை வழங்க வகை செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது, ஒன்பதாவது அட்டவணையில் இந்த சட்டத்தை சேர்ப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • babyballon_trump

    பேபி பலூனில் அதிபர் டிரம் முகம் : அமெரிக்க அதிபரை விமர்சித்து வினோத பரப்புரை

  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்