SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ திட்டங்களை இணைத்து சமக்ர சிக்ஷா அபியான் பெயரில் செயல்படும் : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

2018-05-18@ 02:47:30

சென்னை:  பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:   அனைத்து தரப்பை சேர்ந்தவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த சர்வ சிக்‌ஷா அபியான்(எஸ்எஸ்ஏ) கடந்த 2000-2001 ஆண்டு முதலும் , ராஷ்ட்ரிய மத்திய சிஷ்ஷா அபியான்(ஆர்எம்எஸ்ஏ) கடந்த 2009ம் ஆண்டு முதலும் இரண்டு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு திட்டங்களும் ஒன்றாக இணைக்கும் பட்சத்தில் தொடக்க நிலையில் இருந்து பிளஸ் 2 வரை இந்த திட்டங்களை நீட்டித்து, 2018 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2020 மார்ச் மாதம் இறுதிவரை இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது. மேற்கண்ட இரண்டு திட்டங்களுக்காக 2018-2019 ஆண்டு பட்ஜெட்டில் தனித்தனியாக நிதி ஒதுக்கும் மசோதா நிலுவையில் உள்ளது. மேற்கண்ட திட்டங்களை ஒன்றாக இணைத்தால் அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் ஒரே பட்ஜெட்டாக அறிவித்து நிதி ஒதுக்க வசதியாக இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  

இதன்படி தமிழகத்தில் செயல்படுத்தப்படும் எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ ஆகிய திட்டங்களை ஒன்றாக இணைத்து, அதை நிர்வகிக்க கூடுதல் மாநில திட்ட இயக்குநர் பதவி ஒன்றை அரசு துணைச் செயலாளர் அந்தஸ்த்தில்(ஐஏஎஸ்) உருவாக்க வேண்டும் என்று எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதினார். மாநில திட்ட இயக்குநரின் கடிதத்தை தமிழக அரசு பரிசீலித்து, மேற்கண்ட எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ திட்டங்களை ஒன்றாக இணைத்து ‘சமக்ர சிக்ஷா அபியான்’ என பெயரிட்டுள்ளது. மேலும் இந்த இணைப்பு திட்டத்துக்கு கூடுதல் மாநில திட்ட இயக்குநர் பதவியையும் உருவாக்கி உத்தரவிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்