SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏடன் வளைகுடாவில் புயல் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா? : வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி

2018-05-18@ 02:40:22

சென்னை: “ஏடன் வளைகுடாவில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?” என்பதற்கு வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை வானிலை  ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி: ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று (நேற்று முன்தினம்)  நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. “சாகர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல்  ஏடன் பகுதிக்கு கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது தொடர்ந்து மேற்கு திசையில் ஏடன் பகுதி நோக்கி செல்லக்கூடும். இதனால் மீனவர்கள்  தென்மேற்கு அரபிக்கடலில்  ஏடன் வளைகுடா ஒட்டியுள்ள பகுதிகளுக்கு அடுத்து வரும் இரு தினங்களுக்கு மீன்பிடிக்க  செல்ல வேண்டாம். இந்த புயலால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை.  கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பசலனத்தின் காரணமாக மழை பெய்துள்ளது.  அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை  ஓரிரு இடங்களில்  இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.

திருத்தணி, வேலூரில் தொடர்ந்து சதம்

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 102.38 டிகிரி, வேலூரில் 100.58 டிகிரி வெயில் பதிவாகியது. இவ்வாறு, தொடர்ந்து திருத்தணி, வேலூரில் சதம் அடித்து வருவதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்