SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனநாயக படுகொலை செய்தது காங்கிரசா, பாஜவா? : தமிழிசை பரபரப்பு பேட்டி

2018-05-18@ 02:39:33

சென்னை: ஜனநாயக படுகொலை செய்தது காங்கிரசா, பாஜவா என்று தமிழிசை பதிலளித்துள்ளார். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  அதிக இடங்களை பிடித்த கட்சிதான் ஆட்சியை பிடிக்க முடியும். குறைந்த இடங்களை பிடித்த கட்சி எப்படி ஆட்சி  அமைக்க முடியும். பாஜ ஜனநாயக படுகொலை செய்கிறது என காங்கிரஸ் கூறுவதை கண்டிக்கிறேன். அவர்கள்தான் ஜனநாயக படுகொலை செய்கிறார்கள். மக்கள் காங்கிரசை புறக்கணித்து விட்டனர். அப்படி இருக்கும்போது, எப்படி  அவர்களால் ஆட்சி அமைக்க முடியும்.

சுய லாபத்திற்காக ராகுலும், குமாரசாமியும் இணைகிறார்கள். இதை அந்த கட்சியில் உள்ள சட்டமன்ற  உறுப்பினர்கள் ஏற்க மாட்டார்கள். அதனால் அவர்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவு தருவார்கள். உச்ச நீதிமன்றம்  வழிகாட்டுதலின்படிதான் எடியூரப்பா ஆட்சியமைக்கிறார். அப்படி இருக்கும்போது ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவேன் என்று கூறுவது சரி இல்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத காங்கிரஸ் ஜனநாயகத்தை பற்றி பேசக் கூடாது. இவ்வாறு தெரிவித்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

  • metrorayil_train11

    டெல்லியில் ஜனக்புரி மேற்கு - கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை சோதனை ஓட்டம்

  • northkores_minesexplodes1

    அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வெடிக்க செய்தது வட கொரியா!!

  • 25-05-2018

    25-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்