SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச ரயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி இந்தியாவிலேயே ஐசிஎப் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது : கவர்னர் பெருமிதம்

2018-05-18@ 02:37:34

சென்னை: இந்திய ரயில்வே உற்பத்தி தொழிற்சாலையின் பெரம்பூர் ஐசிஎப் சார்பில், சர்வதேச ரயில் பெட்டி தொழில்நுட்ப 3 நாள் கண்காட்சி சென்னை ஐசிஎப் ரயில்வே பாதுகாப்பு படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. கண்காட்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். முதல் 2 நாளில் கண்காட்சியை பொதுமக்கள் மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை பார்வையிடலாம். ஐசிஎப் நிர்வாகத்துடன் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் இந்த கண்காட்சி இந்தியாவிலேயே முதல்முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே முழுக்க முழுக்க ரயில் பெட்டிகள் தயாரிக்கும் விதமாக கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியில் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட ரயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. வரும் காலங்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்ட ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ள ரயில் பெட்டிகளின் மாதிரி வடிவங்களும், அறிமுகம் செய்யப்பட உள்ள ரயில் பெட்டிகளின் உள்கட்டமைப்பு, பயணிகளின் இருக்கை மாதிரி வடிவங்களும் கண்காட்சியில் இடம்பெற்றன.துரு பிடிக்காத எக்கு, அலுமினியம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ரயில் பெட்டிகளின் வடிவமைப்பும் கண்காட்சியில் வைக்கப்பட்டன.

புல்லட் ரயில், அதிவிரைவு ரயில்கள் இந்தியாவிலேயே தயாரித்து அறிமுகம் செய்ய இக்கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும்  என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஐசிஎப் மற்றும் இந்திய ரயில்வே உயர் அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ரயில்வே போர்டு சேர்மன் அஸ்வானி லோகானி தலைமை வகித்தார். ஐசிஎப் பொதுமேலாளர் சுதன்சுமணி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் பன்வாரிலால் கலந்துகொண்டு புதிய தொழில்நுட்பம், ரயில்பெட்டிகளின் கட்டமைப்பு குறித்த புத்தகம் வெளியிட்டார்.

அப்போது, கவர்னர் பேசுகையில், ஐசிஎப் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு ரயில்பெட்டிகள் தயாரித்து அனுப்பப்படுகிறது. இக்கண்காட்சி மூலம் ஐசிஎப் நிர்வாகத்தின் தொழில்நுட்பம், கட்டமைப்பு மேம்பட வாய்ப்பாக இருக்கும். வரும் காலங்களில் இதைவிட நவீன ரயில்பெட்டிகள் தயாரிக்கும் அளவுக்கு ஐசிஎப் உயரும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்