SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் விவசாயிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

2018-05-18@ 01:58:40

கோவை: கோவையில் விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கோவை சிங்காநல்லூர்  அருகேயுள்ள எஸ்.ஐ.எச்.எஸ் காலனியை சேர்ந்தவர் கதிரேசன் (57). சூலூரில் சர்வேயராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதியம் சூலூர் நில  அளவை பிரிவு அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது விவசாயி ஒருவர் செஞ்சேரிமலையில் உள்ள தனது மாமனாருக்கு சொந்தமான 2.5  ஏக்கர் நிலத்தை இரு பாகமாக உட்பிரிவு செய்து தரவேண்டும் என கேட்டார்.

 அப்போது கதிரேசன் 30 ஆயிரம் ரூபாய் தந்தால்தான் உட்பிரிவு செய்து தரமுடியும் எனக்கூறியுள்ளார். முதல் கட்டமாக கடந்த வாரம் 10 ஆயிரம்  ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் 20 ஆயிரம் ரூபாய் தர சொல்லி கதிரேசன் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு  விவசாயி புகார் தெரிவித்தார். டி.எஸ்.பி ராஜேஷ் தலைமையிலான போலீசார் அளித்த ஆலோசனையின் பேரில், கதிரேசனிடம் ரசாயனம் தடவிய 20  ஆயிரம் ரூபாயை விவசாயி கொடுத்தார். அப்போது போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 கதிரேசன், 2 ஆண்டிற்கு முன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றியபோது அவரது உதவியாளர் தனக்கு தெரியாமல் 10  ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை கண்டுபிடித்துள்ளார். தனக்கு பங்கு தராத ஆத்திரத்தில் அவரை சரமாரியாக தாக்கினார். இந்த காட்சி வாட்ஸ்அப்,  பேஸ்புக்கில் அப்போது பரவியது. இதை தொடர்ந்து கதிரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது, மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அவர் கைது  செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்