SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம்: 5 நாட்களில் சவரனுக்கு ரூ.520 சரிந்தது ; 21ம் தேதிக்கு பிறகு விலை அதிகரிக்க வாய்ப்பு

2018-05-18@ 01:46:28

சென்னை: தங்கம் விலை கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.520 வரை குறைந்துள்ளது. 21ம் தேதிக்கு பிறகு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக  தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏற்றம், இறக்கம் நிலை இருந்து வந்தது. அதே நேரத்தில்  யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் விலை உயர்ந்தும் வந்தது. கடந்த மாதம் 19ம் தேதி தங்கம் விலை 17 மாதத்திற்கு பிறகு புதிய உச்சத்தை தொட்டது.  அதாவது ஒரு சவரன் ரூ.24,040க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த  12ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.24,120க்கு விற்கப்பட்டது. 14ம் தேதி ரூ.24,064, 15ம் தேதி ரூ.24000, 16ம் தேதி ரூ.23,736 என்றும் தங்கம் விலை  குறைந்தது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் சவரன் ரூ.264 வரை குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் தொடர்ச்சியாக 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் ரூ.2950க்கும், சவரன் ரூ.136  குறைந்து ஒரு சவரன் ரூ.23,600க்கும் விற்கப்பட்டது. கடந்த 12ம் தேதி முதல் நேற்று வரை தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் தங்கம் ரூ.520  அளவுக்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வருவது நகை வாங்குவோரை சந்தோஷத்தில்  ஆழ்த்தியுள்ளது. இந்த விலை குறைவு நாளை மறுநாள் வரை இருக்கும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க பொது செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், “ தங்கம் விலை குறையும் என்று நினைத்து,  தங்கத்தில் முதலீடு செய்துள்ள பெரும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை வேறு பக்கம் திருப்பியுள்ளனர். இதனால், தங்களிடம் உள்ள  கையிருப்பு தங்கத்தை விற்பனைக்காக கொண்டுவரத் தொடங்கியுள்ளனர். இதனால், தங்கத்தின் வரவு அதிகரித்துள்ளது. ஆனால் தேவை குறைய  தொடங்கியுள்ளது. இதனால், தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைவு தற்காலிகமானது தான். விலை குறைவு இப்படியே சனிக்கிழமை  வரை நீடிக்க வாய்ப்புள்ளது. 21ம் தேதிக்கு (திங்கட்கிழமை) பிறகு தங்கத்தின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்