SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் பெட்ரோல் ரூ.78ஐ தாண்டியது பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.4 உயரும் : தரகு நிறுவனங்கள் அதிர்ச்சி தகவல்

2018-05-18@ 01:44:52

புதுடெல்லி: தொடர்ந்து 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.78ஐ தாண்டி விட்டது.  லிட்டருக்கு ரூ.4 வரை அதிகரிக்கும் என தரகு நிறுவனங்கள் அதிர்ச்சி கணிப்பை வெளியிட்டுள்ளன.  சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும்  டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால்  கர்நாடக தேர்தல் அறிவித்த பிறகு, கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்தன.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோதும், 19 நாட்களாக விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.   
                                                                                  
கடந்த மாதம் 24ம் தேதி பெட்ரோல் டெல்லியில் ரூ.74.63, கொல்கத்தாவில் ரூ.77.32, மும்பையில் ரூ.82.48, சென்னையில் ரூ.77.43 ஆக இருந்தது.  கர்நாடக தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் விலை உயர்ந்தது. சென்னையில் நேற்று  ஒரு லிட்டர் பெட்ரோல் 23 காசுகள் உயர்ந்து ரூ.78.16 ஆக இருந்தது. டெல்லியில் 22 காசு அதிகரித்து ரூ. 75.32 ஆக உள்ளது.  

இதுபோல் சென்னையில் டீசல் விலை 24 காசு உயர்ந்து ரூ.70.49ஆகவும், டெல்லியில் 22 காசு அதிகரித்து ரூ.66.79 ஆகவும் இருந்தது. தொடர்ந்து  நான்கு நாட்களில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73 காசுகளும்  டீசல் 93 காசுகளும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை  லிட்டருக்கு சுமார் 4 ரூபாய் வரை அதிகரிக்கும் என தரகு நிறுவனங்கள் நேற்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன. இதில், விலை மாற்றம்  செய்யாததால் நஷ்டம் அடைந்துள்ள எண்ணெய் நிறுவனங்கள் இதை ஈடுகட்ட விலையை உயர்த்தலாம். டீசல் லிட்டருக்கு ரூ.3.5 முதல் ரூ.4  வரையிலும், பெட்ரோல் ரூ.4 முதல் ரூ.4.55 வரையிலும் உயர்த்தலாம் என தெரிவித்துள்ளன.

கச்சா எண்ணெய் பேரல் 80 டாலர்களாக உயர்வு

கச்சா எண்ணெய் பேரல் விலை 80 டாலர்களை எட்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் உடனான  அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி உள்ளதாலும், வெனிசுலாவில் உற்பத்தி குறைந்துள்ளதாலும், சர்வதேச அளவில் கச்சா  எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பது, பிரென்ட் வடக்கு கடல் உற்பத்தியாகும். இங்கு  இருந்து உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் பேரல் விலை நேற்று 80 டாலர்களாக உயர்ந்தது. 2014ம் ஆண்டுக்கு பின்னர் இந்த அளவுக்கு விலை  உயர்ந்து இதுவே முதல் முறையாகும். இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்யை மட்டும் நம்பி உள்ள, நாடுகள் கடும் பாதிப்பை சந்திக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்